விருதுநகர், செப்.12- குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி விருதுநகர், தேனி மாவட்டங்களில் மாதர் சங்கத்தினர் மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் அருகே உள்ள கண பதி நகர், விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வி.எம்.சி காலனி, பாத் திமா நகர் பகுதிகளைச் சேர்ந்த ஏழை-எளிய மக்கள் பலருக்குச் சொந்த வீடில்லை. அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வரு கின்றனர். வீடற்றவர்களுக்கு இல வச குடிமனைப் பட்டா வழங்க வலி யுறுத்தி கடந்தாண்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்த னர். இவர்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு ஒப்படைப்பு ஆணை வழங்கப்பட்டது. பட்டா வழங்க உரிய நடவடிக்ககை எடுக்க வில்லை. இந்தச் சூழலில், மனுக் கொடுத்த அனைவருக்கும் இலவச குடிமனைப் பட்டா வழங்க வலி யுறுத்தி மாதர் சங்கத்தினர் மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தி னர். நகர்குழு உறுப்பனர் ஆர்.முரு கேஸ்வரி, மாவட்டச் செயலாளர் என்.உமாமகேஸ்வரி, மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி, வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர். தேனி மாவட்டத்தில் நடை பெற்ற மனு கொடுக்கும் போராட் டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ். மீனா தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ். வெண்மணி, கே.கோமதி, மாவட் டக்குழு உறுப்பினர் தனலட்சுமி, சுஜாதா, அன்னலட்சுமி, ஜோதி மணி, சுதா, சித்திகா, கத்தீஷா, சாந்தி, அமுதா, பஞ்சவர்ணம், சிஐ டியு தேனி மாவட்டச்செயலாளர் எம்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.