districts

img

தேனியில் வாழை தொகுப்பு திட்ட கருத்தரங்கம்

தேனி, டிச.29- தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேனியில் வாழை தொகுப்பு வளர்ச்சித்திட்ட கருத்தரங்கம் நடை பெற்றது. தேனி தனியார் உணவக விடுதியில் நடைபெற்ற கருத்தரங்கை தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை இயக்குநர் மருத்து வர் இரா.பிருந்தாதேவி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் துவக்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் பழங்கள், காய்கறி கள், பூக்கள், மலைத் தோட்டப் பயிர்கள், வாசனை பயிர்கள் மற்றும்; மருத்துவ பயிர் கள் என சுமார் 61,804 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் குறிப் பாக வாழை பயிர் தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சுமார் 6,300 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இங்கு கிராண்ட் நைன், செவ்வாழை, நேந்தி ரன் கற்பூரவள்ளி, நாழிபூவன், ரஸ்தாளி, நாடு போன்ற இரகங்கள் சாகுபடி செய்யப்படு கிறது.

இம்மாவட்டத்தில் சுமார் 4,350 விவ சாயிகள் வாழை விவசாயத்தை மேற் கொண்டுள்ளனர். சுமார் 4.72 லட்சம் மெட்ரிக் டன்கள் வாழை பழங்கள் உற்பத்தி செய் யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் வாழை பழங்கள் தமிழ்நாட்டின் இதர மாவட் டங்களுக்கும், கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 4 ஆயிரம் மெட்ரிக் டன்களுக்கு மேல் வளைகுடா மற்றும் மத் திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கருத்தரங்கில், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் முனைவர் உமா, தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் எஸ்.தமிழ்வேந்தன், தேசிய தோட்டக்கலை வாரிய முதுநிலை தோட்டக் கலை அலுவலர் ஏ.கே.சர்மா, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் த.ஆறுமுகம், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய முதன்மை ஆராய்ச்சியாளர் வி.குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் எம்.பாண்டி, உதவி இயக்குநர் அ.ஆறுமுகம், தோட்டக்கலை சார்ந்த அலுவலர்கள், வாழை விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.