districts

img

மணிப்பூர் வன்முறைக்கெதிராக ஆர்ப்பாட்டம்

சின்னாளபட்டி, ஆக.7- மணிப்பூரில் கிறிஸ்தவ மக்கள்  மீது தாக்குதல், குக்கி பழங்குடி பெண்கள் மீது வன்கொடுமைகள் மற்றும் சர்ச்சுகள் எரிக்கப்பட்ட தற்குக் கண்டனம் தெரிவித்து நிலக்  கோட்டையில் பேரணி, திண்டுக்கல்  லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திங்களன்று நிலக்கோட்டை யில் சமூக நல்லிணக்க கூட்ட மைப்பு சார்பாகப் பேரணி நடை பெற்றது. பேரணியில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பின ருமான கே.பாலபாரதி, சமூக நல்லி ணக்க கூட்டமைப்பு சுதா, குளோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சந்தனம் கவுஸ்பாட்ஷா, ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஜி. ராணி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் சி. கணேசன் மக்கள் சட்ட உரிமை இயக்க மாநிலத் தலைவர் அண்ணா துரை பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புக்குழு வழக்கறி ஞர் சாய்ராபானு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு  உறுப்பினர் எஸ்.ஆர். சௌந்தர் ராஜன் நிலக்கோட்டை ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், சாரதா  உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர். திண்டுக்கல் ஏ.பி.நகர், அந்தோ ணியார் தெரு மக்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் செபாஸ்டியான், சமூக ஆர்வ லர்கள் கெய்டன் டிவாசு, ராஜன்  உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர். விருதுநகர் மணிப்பூர், ஹரியானா, உத்த ரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மக்கள்  மத்தியில் வெறுப்பு உணர்வைத் தூண்டி மத ரீதியாக கலவரங் களை ஏற்படுத்தி வரும் பாஜக வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் விருது நகர் தேசபந்து மைதானத்தில் நடை பெற்ற போராட்டத்தில் நகர் செய லாளர் எல்.முருகன், வடக்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.முத்துவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க  மாநிலப் பொருளாளர் பழனிச்சாமி,  மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜெயபாரத், ஆர்.விஜயபாண்டி, ராஜேஸ்வரி, வி.சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.