திண்டுக்கல், செப்.15- 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆஷா ஊழியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆஷா ஊழியர் சங்க கன்வீனர் செல்வி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் சி.பி.ஜெயசீலன், மாவட்டப் பொருளாளர் தவக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பாலச்சந்திர போஸ் ஆகி யோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 13 வருடங்களுக்கு மேலாக மலைப்பகுதிகளில் மக்களு க்கு மருத்துவ சேவை செய்துவரும் 150-க்கும் மேற்பட்ட ஆஷா ஊழியர்க ளுக்கு மாத ஊதியமாக ரூ.2000 முதல் 3000 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்து, நிரந்தர சம்பளம் குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் வழங்கிட வேண்டும், பத்து வருடம் பணி முடிந்த ஆஷா ஊழி யர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பதவி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.