தூத்துக்குடி, பிப்.11 தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலியர் கல்லூரி கொரோனா தடுப்பூசி மையத்தில் 1 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக பாராட்டு விழா மாவட்ட ஆட்சியர் கி.செந் தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் கேக் வெட்டி கொண்டா டப்பட்டது. விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தாவது: தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரசு செவிலியர் கல்லூரி யில் கிட்டதட்ட 1 லட்சம் தடுப்பூசிகள் இது நாள் வரை போட்டிருக்கிறார்கள். 1 லட்சம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்ட தில் தூத்துக்குடி மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அனை வரும் இணைந்து செயல்பட்டதினால் தான் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனையிலே 1 லட்சம் தடுப்பூசிகள் போட முடிந்தது. இது தமிழ்நாட்டிலேயே 4ஆவது மருத் துவமனை. சென்னை, மதுரை, திருநெல்வே லிக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலே 1 லட்சம் தடுப்பூசிகள் போட்டிருக்கிறார்கள். இதுவரை 1 லட்சம் கொரோனா தடுப்பூசி கள் போடப்பட்டதில் முதல் தவணை 51061, இரண்டாவது தவணை 48228, பூஸ்டர் 1128 என மொத்தம் 100417 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 4000 டெஸ்ட் செய்வதற்கு அவர்க ளுக்கு திறன் இருக்கிறது. இரண்டு மாதத் திற்கு முன்பே நாம் பாராட்டியிருந்தோம். இங்குள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் கோவேக்சின், கோவிசீல்டு தடுப்பூசி போடுகிறார்கள். பூஸ்டர் தடுப்பூசியும் தயா ராக வைத்திருக்கிறார்கள். எனவே பொது மக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி களை தவறாமல் செலுத்திடவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் செலுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவ கண்காணிப்பா ளர் ராஜேந்திரன், துணை முதல்வர் கலை வாணி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி, சமூக நோய் தடுப்பு துறை தலைவர் சுனிதா, தடுப்பூசி மையம் நோடல் அலுவலர் மாலையம்மாள் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், செவிலியர்கள், மருத்துவ கல்லூரி மாண வர்கள் கலந்துகொண்டனர்.