districts

img

மாநகராட்சி சுகாதார அதிகாரியை நியமனம் செய்திடுக!

திண்டுக்கல், செப்.11- திண்டுக்கல்லில் மாநக ராட்சி சுகாதார அதிகாரியை பணி நியமனம் செய்ய வேண்  டும், டெங்கு ஒழிப்பு நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் நகர்க்  குழு சார்பில் மனு கொடுக் கப்பட்டது.  மனுவில், சமீப காலத் தில் டெங்கு காய்ச்சல் அதிக மாக பரவி வருகிறது. சென்  னையில் டெங்குவால் 4 வயது  சிறுவன் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி யில் சுகாதார துறை அதிகாரி  இதுவரை நியமனம் செய்ய வில்லை. இந்நிலையில் மாந கராட்சி பகுதியில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.  நிகழ்வில், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்ட துணைச்செயலா ளர் ஏ.கே.முகேஷ், திண் டுக்கல் நகரத் தலைவர் அஜீத், நகரச்செயலாளர் பிரேம்குமார்,  துணைத்தலை வர் ஜூலியன், நகர்க்குழு உறுப்பினர்கள் தர்ம லிங்கம், சூர்யா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.