புதுதில்லி,ஜன.9- அன்னை தெரசாவின் சேவை மையம் உள்பட பல தன்னார்வ தொண்டு நிறுவ னங்களின் வெளிநாட்டு உதவிபெறும் அனுமதியை ஒன்றிய உள்துறை அமைச்ச கம் புதுப்பித்துக் கொடுத்துள் ளது. மேற்கு வங்கம் கொல் கத்தாவில் இயங்கி வரும் அன்னை தெரசாவின் சேவை மையத்திற்கு வழங்கப்பட்டி ருந்த வெளிநாட்டு நிதி உதவியினை பெறுவதற் கான அனுமதியை புதுப் பித்துத் தர, ஒன்றிய உள் துறை அமைச்சகம் கடந்த மாதம் மறுத்து விட்டது. இது மோடியின் கிறிஸ்துமஸ் பரிசு என்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து வெளி நாட்டு நிதி உதவி பெறுவதற் கான அனுமதியை புதுப் பிக்க, உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டு மென சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்ச கம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அனுமதி புதுப்பித்து தரப் பட்டுள்ளது. அன்னை தெர சாவின் சேவை மையத்தை தவிர, ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தின் சேவை மையம், தில்லி பல்கலைக்கழகத்தின் சேவை மையம் உள்பட பல தொண்டு நிறுவனங்களின் அனுமதியும் புதுப்பித்து தரப்பட்டுள்ளது.