districts

img

கீழமேல்குடி சாலைகளை சீரமைத்திடுக!

மானாமதுரை, ஜன.21-  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழ மேல்குடி செல்கிற பாதை யிலுள்ள சோமநாதபுரம், சீனிவாசன் நகர் ஆகிய பகு திகளில் உள்ள விரிவாக்க பகுதிகளில் சாலைகளை மேம்படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி மானா மதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளார்.  அந்த மனுவில், மானா மதுரை புதிய பேருந்து நிலை யம் அருகே உள்ள சோமநாத புரம், சீனிவாசன் நகர் பகுதி கள் கீழே மேல்குடி ஊராட்சிக் குட்பட்ட பகுதிகளாகும்.  இந்த பகுதிகளில் லேசான மழை பெய்தாலே சேறும் சக்தியுமாகி சாலை களில் மக்கள் செல்ல முடி யாத அவல நிலை தொடர் கதையாக இருந்து வருகி றது. எனவே, இதுதொடர் பாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நடவடிக்கை எடுத்து சாலையினை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.