districts

img

நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு நல வாரியம்

தென்காசி, டிச.  4  அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் தென்காசி முதல் மாவட்ட மாநாடு கடையநல்லூ ரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். வரவேற்புகுழு தலைவர் மணி கண்டன் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் மாநில செயலாளர் மலை விளை பாசி துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் லாசர் முடித்து வைத்தார். மாநாட்டில் மாவட்ட செயலா ளர் வெங்கடேஷ் வேலை அறிக்கை யை வைத்தார். மாவட்ட பொருளா ளர் வரவு செலவு அறிக்கை வைத்தார். சிஐடியு மாவட்ட தலைவர் அயூப்கான் மாநாட்டை வாழ்த்தி பேசினார். மாவட்ட  தலைவராக வி.குணசீலன், செய லாளராக சி.வெங்கடேஷ் ,பொரு ளாளராக எம்.முருகேசன் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழகத்தில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் அடையாள அட்டைவாங்கி ஒரு கோடி பேர்பணிபுரிந்து வருகிறார் கள். அவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து நல வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும்,100 நாள் வேலை திட்டத்தில் பணி புரியும் பணியா ளர்களுக்கு மத்திய அரசு ஒருங்கி ணைந்த நலத்திட்டங்களை உரு வாக்கி அவர்கள் வாழ்வு மேம்பட பணி செய்ய வேண்டும், இலவச மருத்துவ முகாம் நடத்தி தேவை யான மருந்து மாத்திரை வழங்க  வேண்டும் , வீடுகள் இல்லாதவர்க ளுக்கு இலவச வீடுகள் வழங்குவ தற்கு ஆவன செய்ய வேண்டும், தற்போது வழங்கப்படும் ஊதி யத்தை உயர்த்தி ரூ 600 ஆக வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.