இராமநாதபுரம்,ஜூன் 1-
ஏர்வாடியில் பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத் துடன் புதன்கிழமையன்று தொடங்கியது.
இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருத்தப்படும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மத நல்லிணக்க சந்த னக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில், சந்தனக்கூடு திருவிழா கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. மே 31 புதன்கிழமையன்று ஹக்தார் நிர்வாகிகள் தலைமையில் கொடியேற்றம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை காண வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயி ரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜூன் 12 திங்கட்கிழமையன்று சந்தனக்கூடு திருவிழா, ஜூன் 13 ஆம் தேதி மௌலீது நிறைவு, பாதுஷா நாயகத்திற்கு சந்தனம் பூசுதல்,19 ஆம் தேதி கொடியிறக்கத்து டன் திருவிழா நிறைவடைகிறது.