districts

img

அருப்புக்கோட்டை அருகே குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி

அருப்புக்கோட்டை, ஜூலை 20- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபா லாபுரத்தில் ரூ. 12.80 லட்சம் செல வில் புதிப்பிக்கப்பட்ட அங்கன் வாடி மையக் கட்டிடம் குழந்தை களை ஈர்க்கும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது.  அருப்புக்கோட்டை அருகே உள்ளது கோபாலாபுரம். இங்கு  ஏற்கனவே அங்கன்வாடி மையக்  கட்டிடம் இருந்தது அது பழுதடைந் காரணத்தால் அதைப் புதுப்பிக்க வேண்டுமென அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நடவ டிக்கை எடுத்த மாவட்ட நிர்வா கம், அதை மாதிரி அங்கன்வாடி மையமாக மாற்றி குழந்தைகள் ஆடல், பாடல் மற்றும் விளையாட்டு டன் கல்வி கற்கும் இடமாக மாற்ற  முடிவு செய்தது. குழந்தைகளின் கற்றல் ஆர் வத்தை அதிகரிக்கும் வகையில் பல  புதிய அம்சங்களைப் புகுத்தி, குறிப்பாக முன்பருவக் கல்வி  தரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளைக் கவரும் வண்  ணம் வண்ண ஓவியங்கள் மற்றும் பல்வேறு பொருட்களைக் கொண்டு அதை உருவாக்கியுள்ளது.

 ரூ.12.80 லட்சம் செலவில் கட்டி  முடிக்கப்பட்டுள்ள இந்த அங்கன் வாடி மையம் அப்பகுதியினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஹேமாமாலினி கூறுகை யில், ஏற்கனவே இருந்த அங்கன் வாடி மையத்திற்கு எனது குழந்தை  செல்ல மிகுந்த தயக்கம் காட்டி வந்தான். தற்போது, பள்ளி போல்  அல்லாமல் பூங்கா போல் இருப்ப தால் எவ்வித தயக்கமுமின்றி ஆர் வத்துடன் சென்று வருகிறான் என்றார்.  குழந்தைகள் நல மையப் பணி யாளர் இந்திரா கூறுகையில், முன்  பருவக் கல்வியை முக்கிய நோக்க மாகச் செய்து வருகிறோம். கற்றல் திறன் வளர்ச்சி, மொழி வளர்ச்சி, உடல் வளர்ச்சி குறித்தும் நன்றா கப் பேசுவதற்கும், ஒற்றுமை குறித்தும் கற்றுத் தருகிறோம். அவர்களாகவே உணவு சாப்பிடச் சொல்லித் தருகிறோம் என்றார். அருப்புக்கோட்டை வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலு வலர் பத்மாவதி கூறுகையில், இந்த  அங்கன்வாடி மையம் குழந்தை களுக்கு ஏராளமான கற்றல் அனு பவங்களை தரக் கூடியதாகவும், அவர்களை ஈர்க்க கூடிய வகை யிலும் உள்ளது. மையத்தின் உட்  புறம் மற்றும் வெளிப்புறம் சித்தி ரங்கள் வரையப்பட்டுள்ளன. விளையாட்டு உபகரணங்கள் குழந்தைகளுக்கு நல்ல அனு பவத்தைத் தருகிறது. இதனால் மையத்திற்கு வருவோரின் எண்  ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்த  கட்டிடமே ஒரு கல்வி உபகரண மாக செயல்பட்டு வருகிறது என் றார்.