கண்டமனூர் ஊராட்சி தலைவரின் கணவர் மீது வழக்கு பதிவு
கடமலைக்குண்டு, மே 2- தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே புதுராமச்சந்தி ராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (38). இவ ருக்கும் இதே கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவ ருக்கும் இடையே குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக முன்பகை இருந்து வந்துள்ளது. திங்கள்கிழமை சரண்யா அவருடைய வீட்டிற்கு புதிதாக குடிநீர் குழாய் அமைத்துள் ளார். அதற்கு முத்துப்பாண்டி எதிர்ப்பு தெரிவித்ததால் இது தொடர்பாக சரண்யா கண்டனூர் ஊராட்சி மன்ற தலைவ ரின் கணவர் பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தார். புது ராமச்சந்திரபுரத்திற்கு வந்த பாலமுருகன், முத்துப்பாண்டி யை சரமாரியாக தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். இதுதொடர்பாக முத்துப்பாண்டி அளித்த புகா ரின் பேரில் பாலமுருகன், சரண்யா இருவர் மீதும் கண்ட மனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மூத்த தோழர் கக்கன் காலமானார்
மதுரை,மே 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலூர் தாலுகா மேலவளவு கட்சி கிளை உறுப்பினர் சி.கக்கன் (வயது 55) உடல் நலக் குறைவால் காலமானார். அன்னா ரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் மற்றும் தாலுகா குழு உறுப்பி னர்கள், கட்சியினர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ரயில் மோதி முதியவர் பலி
சின்னாளப்பட்டி,மே 2- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த வெள்ளோடு ரயில்வே கேட் அருகே சுமார் 60-வயது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல் சார்பு ஆய்வா ளர் மணிகண்டன் தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன், விசாரணை செய்தனர். இதில், ஆலமரத்துப்பட்டி, விஜ யன்கொட்டத்தைச் சேர்ந்த சூசைராஜ் வயது (57) என்பது தெரியவந்தது. இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் தோல் பதனிடும் நிறுவனத்தில் சுமார் 10-ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாகவும், திங்களன்று இரவு பணியை முடித்துவிட்டு ரயில்வே தண்டவாள ஓரத்தில் வீட்டிற்கு வரும் பொழுது ரயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப் படுகிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திண் டுக்கல் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடியில் காய்கறி வியாபாரிகள் மறியல்
தேனி, மே 2- காய்கறி விற்பனையாளர்களை நகராட்சி கடைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், போடி நகர் காவல் நிலையம் எதிரில் 70 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் வீடுகளின் முன்பாக சாக்கடைக்கு மேல் வியாபாரிகள் காய்கறி கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலை யம் அருகே 40 கடைகள் கொண்ட காய்கறி வணிக வளாக கடை கட்டி முடிக்கப்பட்டு ஏலமும் விடப்பட்டு விட்டது. அந்தக் கடைகளில் காய்கறி வியாபாரிகள் கடை நடத்து வதற்கு கூடுதல் முன் தொகையும் அதிக வாடகையும் கேட்பதால் வியாபாரிகள் அங்கு செல்லவில்லை .ஏலம் எடுத்தவருக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகம் காய்கறி கடைகள் நடத்தும் பகுதி களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடைகளில் தூர் வாரி குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி நட வடிக்கை எடுத்தனர். தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் கடை களை இங்கு நடத்தக் கூடாது புதிய வணிக வளா கத்திற்கு கடைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலி யுறுத்தினர். இருபுறங்களிலும் மெகா பிளக்ஸ் தட்டிகள், பேரிகாட் வைத்து தடுத்து இங்கு யாரும் டெம்போ மற்றும் லாரி களில் காய்கறிகள் கொண்டு வரக்கூடாது. வந்து இறக்கக் கூடாது என எச்சரித்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறி வித்துவிட்டன. இதனால் ஆவேசமடைந்த வியாபாரிகள் அரசியல் அமைப்புகள் ஆதரவுடன் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். அதனைத்தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி பழைய இடத்தில் கடை அமைக்க உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.
இராமேஸ்வரத்தில் விடிய விடிய விடிய மழை
இராமேஸ்வரம்,மே.02: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது.இதன்தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் செவ் வாய்கிழமை வரை இராமேஸ்வரம், பாம்பன்,மண்டபம், இராமநாதபுரம்,வாலிநோக்கம் உள்ளிட்ட கடலோர பகுதி களில் பரவலாக கன மழை பெய்தது.இதில், ராமேசு வரத்தில் அதிக பட்சமாக 9 செ.மீ,மண்டபம் 7 செ.மீ, பாம்பன் 5.4.செ.மீ, ராமநாதபுரத்தில் 4.7 செ.மீ, அளவிற்கு மழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழைபெய்து வருவ தால் வெயிலின் தாக்கம் இன்றி மாவட்டம் முழுவதிலும் குளுமையான சூழல் நிலவியது.
தேனி மாவட்டத்தில் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
தேனி, மே 2- தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது .கொடைக்கானல் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதி கரித்து வருகிறது .வெள்ளப் பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை யினர் தடை விதித்துள்ளனர் . வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலை யில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத் திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அணை யின் நீர்மட்டம் 116.85 அடியாக உள்ளது. வரத்து 517கனஅடி, நீர் திறப்பு 100 கனஅடி, இருப்பு 2060 மி.கனஅடி. வைகை அணையில் இருந்து மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக கடந்த 2 நாட்களாக தண்ணீர் திறக்கப் பட்டு வருகிறது. தற்போது மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவ தால் செய்வாய்க்கிழமை காலை முதல் வைகை அணையில் இருந்து மதுரைக்கு திறக்கப்படும் தண்ணீ ரின் அளவு 872 கன அடியிலிருந்து 372 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 53.04 அடியாக உள்ளது. இருப்பு 2416 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.80 அடி, வரத்து 57 கன அடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.90 அடி, வரத்து 96 கன அடி, திறப்பு 3 கனஅடி. இந்த அணை யின் நீர்மட்டம் தொடர் மழையால் ஒரேநாளில் 10 அடி வரை உயர்ந் துள்ளது மழையளவு பெரியாறு 8.4, தேக்கடி 6.4, கூட லூர் 14.2, சண்முகாநதி அணை 22.4, உத்தமபாளையம் 10.6, போடி 14.2, வைகை அணை 2, சோத்துப் பாறை 12, மஞ்சளாறு 2, பெரிய குளம் 3.4, வீரபாண்டி 12.4, அரண் மனைப்புதூர் 4.6, ஆண்டிபட்டி 2.6 மி.மீ மழையளவு பதிவாகி உள் ளது.
பட்டதாரி ஆசிரியர் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு
திண்டுக்கல், மே 2- தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடை பெற்றது. திண்டுக்கல் மாவட்ட கள்ளர் கிளைப்பள்ளி அமைப்பின் மாவட்ட பொருளாளர் த.அருள் விஜய், மாநில செய்தி தொடர்பாளர் முனைவர் மு.முருகேசன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. தேர்த லில் மாவட்டத்தலைவராக தோ.பிரான்சிஸ் பிரிட்டோ, மாவட்டச்செயலாளராக லு.செல்மா பிரியதர்சன், மாவட்ட பொருளாளராக செ.செந்தில்குமார், மாவட்டசட்டச் செய லாளராக ப.குருராமன், மாவட்ட தலைமையிடத்து செய லாளராக முனைவர் மு.முருகேசன், மாவட்ட செய்தி தொடர்பு செயலாளராக சு.நல்லதம்பி, மாவட்ட மகளிரணி செயலாளர்களாக வெ.சாந்தி, ப.வடிவுகரசி,ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேனி தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தேர்தலில் கீழ்காணும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார்கள். இதற்கான தேர்தல் மதுரை மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் முன்னிலையில் நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவராக ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஜி. மோகன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். மாவட்ட செயலாளராக மலைச்சாமி, மாவட்ட பொருளாளராக விக்னேஷ் பாபு ,மாவட்ட சட்ட செயலா ளராக சண்முகவேல், மாவட்ட தலைமை நிலைய செய லாளராக அரவிந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளராக விக்னேஷ் பாபு மற்றும் மாவட்ட மகளிர் அணி சார்பாக ஜமுனா ராணி, பிரபா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் கழ கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
‘பட்டை தீட்டிய வைரமாக ஜொலித்தவர் எம்என்எஸ்’
திருச்சுழி, மே.2- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அவர்களின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தாலுகா குழு உறுப்பி னர் செல்வராஜ் தலைமையேற்றார். வட்ட செயலாளர் மார்கண்டன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் துவக்கி வைத்துப் பேசினார். மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஏ.பெருமாள், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தி உரையாற்றினர். அப்போது கே.பாலகிருஷ்ணன் பேசிய தாவது: மிகுந்த கட்டுப்பாடுகள் உள்ள இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதில் உள்ள வர்களால் ஒரு சிறு களங்கமும் ஏற்பட்டு விடக் கூடாது; ஒரு கரும்புள்ளி கூட இயக் கத்திற்கு வந்து விடக் கூடாது என்பதில் கட்சி உறுதியாக இருக்கும். எத்தனையோ அடக்கு முறைகளையும், இடர்பாடுகளையும் சந் தித்த இயக்கம். ஆனால், இன்றுவரை உயி ரோட்டமாக இருக்கிறது. அர்ப்பணிப்போடு பணியாற்றினால் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உயர்ந்த இடத்தை அடைய முடியும். தோழர் எம்.என்.எஸ், மாணவராக இருந்த காலத்திலேயே இந்த இயக்கத்தில் சேர்ந்தார். கட்சியில் முழுநேர ஊழியராகி மக்களுக்கு சேவையாற்றினார். பலவித மான பயிற்சிக்குப் பின்தான் ஒருவர் தலை வராக உருவாக முடியும். பட்டை தீட்டத் தீட் டத்தான் வைரம் ஜொலிக்கும். அதைப் போல தோழர் எம்.என்.எஸ். ஜொலித்தார். அவர் ஒருநாள் கூட, ஓய்வு எடுக்கி றேன், உடல் நிலை சரியில்லை, மருத்துவ மனைக்கு செல்கிறேன் எனக் கூறியதே இல்லை. அவருடைய இழப்பு. அவரது குடும்பத்தார்க்கு மட்டுமல்ல. கட்சிக்கே ஈடு செய்ய முடியாத இழப்பு. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ்,எம்.முத்துக் குமார், வி.முருகன் உட்பட பலர் பங்கேற்ற னர். ரமேஷ்பாபு நன்றி கூறினார். இதில் எம். ரெட்டியபட்டி ஊராட்சிமன்றத் தலைவர், திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சி பிர முகர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.