மதுரையில் மண்டல அளவில் என்.சி.சி மாணவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு முகாமில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் திருவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி மோனிவர்ஷா மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார். அவருக்கு பள்ளியின் தாளாளர் லயன் ஆர். வெங்கடாசலபதி , முதல்வர் எம்.பி. முருகன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.