தேனி, ஜூலை 7- ஆண்டிபட்டியில் ஒரே நாளில் ஒரே பள்ளியை சேர்ந்த 12 மாணவ -மாணவிகள் உட்பட 28 பேருக்கு கொரோனா .உறுதி செய்யப்பட்டுள்ளது .இதனைத் தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணியா விட்டால் அபராதம் ரூ 500 விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் எச்சரித் துள்ளார். கொரோனா பாதிப்பு தேனி மாவட்டத்தி லும் கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தி யவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தால், கொரோனா தொற்றால் பாதித்தவர் களுக்கு அதிகம் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பள்ளிகளில் சுகா தார துறையினர் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுத்து வரு கின்றனர். அதில் ஆண்டிபட்டி நகரில், கடை வீதி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தை களுக்கு காய்ச்சல் மற்றும் சளியால் அவதி யடைந்து வந்ததாக தெரிகிறது. இத னைத்தொடர்ந்து சுகாதார துறையினர் அந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் முதற் கட்டமாக 70 குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவு வியாழனன்று காலை வெளியான தில், 12 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரிய வந்தது. அதில் 6ம் வகுப்பு படிக்கும் 5 பேர், 7ம் வகுப்பு படிக்கும் 4 பேர், 8ம் வகுப்பு படிக்கும் 3 பேர் என மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது. கொரோனா தொற்று உறுதியான குழந் தைகள் அவர்களது வீட்டிலேயே தனி மைபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளியில் 12 குழந்தைகளுக்கு தொற்று உறுதியான நிலையில், மற்ற குழந்தைக்கும், ஆசிரி யர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
முகக் கவசம் கட்டாயம்
பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவ சம் அணிய வேண்டும் அவ்வாறு தவறும்பட் சத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் ரூ.500ஃ- அபராதம் விதித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல் லும் போது, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண் டும் என மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் தெரிவித்துள்ளார்.