மாவட்ட, நகர கூட்டுறவு வங்கிகளை தரம் பிரிக்காமல் அனைத்து ஊழியர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.நகரக் கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் மதுரையில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எம். பெரியார் பாண்டியன் தலைமை வகித்தார்.