districts

மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டம்

பெரம்பலூர், செப்.29-  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் கால்நடை காப்பீடு திட்டத்தின் மூலம் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியா தெரி வித்துள்ளார்.  பெரம்பலூர் மாவட்டத்தில், கால்நடை காப்பீடு செய்ய 800 இலக்கு நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இரண்டரை முதல் 8 வயதுடைய பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு  செய்து கொள்ளலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர் தங்களுக்கு அருகாமையில் உள்ள கால்நடை  மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.  கால்நடை காப்பீடு திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்யப்படும். இதர வகுப்பி னர்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்யப்படும். அதிகபட்ச மாக ஒரு குடும்பத்துக்கு, 5 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

;