districts

img

காதலனுடன் திருமணம் செய்து வைக்கக் கோரி பாண்டிச்சேரி இளம்பெண் மாதர் சங்கத்தினருடன் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா 3 பேர் மீது வழக்கு பதிவு

பெரம்பலூர், ஏப்.8 - காதலனுடன் திருமணம் செய்து வைக்கக் கோரி, பாண்டிச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஏப்.7 அன்று பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  பாண்டிச்சேரி மாநிலம் முத்தியால் பேட் மணிக்கூண்டு எதிரில் வாடை தெரு வைச் சேர்ந்தவர் துரை மகள் சித்ரா (26). பிளஸ் டூ படித்து உள்ள இவர்,  ஷாடிடாட் காம் (Shaadi.com) என்ற  தகவல் மையத்தில் வரன் வேண்டி  பதிவு செய்தார். அப்போது, பெரம்ப லூர் மாவட்டம் அடைக்கம்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன்  கமல் (27) என்பவர் சித்ராவின் மொபைல்  போனுக்கு தொடர்புகொண்டு இருவ ரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறினார்.  தொடர்ந்து இருவரும் செல்போ னில் அடிக்கடி பேசி வந்தனர். இதைத்  தொடர்ந்து, கமல் தனது ஆதார்  அட்டையை சித்ராவின் மொபைல் போ னுக்கு அனுப்பி, பாண்டிச்சேரியில் பதிவு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு  தெரிவித்தார். ஸ்ரீ வேணுகோபால் சுவாமி  தேவஸ்தானத்தில் மார்ச் 21 ஆம் தேதி  திருமணம் செய்வதற்காக, திருமண பத்திரிக்கை உள்ளிட்ட திருமண ஏற்பாடு களை சித்ராவின் குடும்பத்தினர் செய்து  வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம்  தேதி சித்ராவின் மொபைலுக்கு தொடர்பு  கொண்ட கமல், வீட்டில் உள்ள அனை வரும் உன்னை பார்க்க விரும்புவ தாகக் கூறி, தனது ஊருக்கு கிளம்பி வரு மாறு சித்ராவிடம் தெரிவித்தார்.

இதை  நம்பி கமல் வீட்டுக்கு சென்ற சித்ராவை,  அவர் பலமுறை பாலியல் வன்கொ டுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஊருக்கு சென்ற சித்ரா, மீண்டும்  கமலை செல்போனில் தொடர்பு கொண்டபோது, ‘திருமணம் செய்து கொள்ள முடியாது’ என கமல் தெரிவித் துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா,  பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீ சில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனையடுத்து, மாதர் சங்க  பெரம்பலூர் மாவட்ட நிர்வாகி எ.கலை யரசி மற்றும் புதுச்சேரி மாதர் சங்க நிர்வா கிகளுடன் சித்ரா வியாழனன்று பெரம்ப லூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து,  ‘காதலனுடன் திருமணம் செய்து வைக்கக் கோரி’ மனு கொடுத்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில்  இருந்த போலீசார் அவர்களை தடுத்து  நிறுத்தினர். இதனால், ஆட்சியர் அலுவ லக படியில் அமர்ந்து, இளம்பெண் சித்ரா  மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் எஸ்.ஐ. சித்ரா உறுதிய ளித்ததையடுத்து, போராட்டத்தை கை விட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு  கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து வெள்ளியன்று (ஏப்.8) பெரம் பலூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலின் தாயார் ராணியை கைது  செய்தனர். மேலும் தலைமறைவாகிய கமலையும் அவரது மாமாவையும் கைது  செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

;