districts

img

கை.களத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் எப்போது அமைக்கப்படும்? வாலிபர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

பெரம்பலூர், ஜூன் 1 - பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமத் தில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாயன்று பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரத போ ராட்டம் நடைபெற்றது.  மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.சக்திவேல் தலைமை வகித்தார். விதொச மாவட்ட செயலாளர் அ.கலையரசி துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி.அறிவழகன், மாவட்ட செயலாளர் எஸ்.கே.சர வணன், பொருளாளர் கே.ராமு, கரும்பு  விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்தி ரன், விதொச மாவட்ட தலைவர் அ.முரு கேசன், வாலிபர் சங்கம் ஆர்.கோகுல கிருஷ்ணன், துணைச் செயலாளர் பி. துரை, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.வேல்முருகன் கண்டன உரை யாற்றினர். ஆட்டோ சங்கம் எ.ரெங்கநாதன், மாற்றுத்திறனாளிகள் சங்கம் வி.செல்ல முத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். கை.களத்தூர் பேருந்து நிலைய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட உயர்நீதிமன்றம் முறையான உத்தரவிட்டும், இதுவரை அகற்ற வில்லை. உடனடியாக அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். கை.களத்தூ ரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத் திட அரசு அனுமதியும் நிதியும் அளித்த பிறகும் கடந்த ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.  எனவே காலம் தாழ்த்தாமல் உடனே  பணிகளை துவக்கிட வேண்டும். கை. களத்தூரில் இயங்கி வந்த 108 ஆம்பு லன்ஸ் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. அவற்றை மீண்டும் கை.களத் தூரில் துவக்கிட வாலிபர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.

;