districts

பெரம்பலூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி 5 வயது குழந்தை மட்டும் படுகாயங்களுடன் மீட்பு

பெரம்பலூர். ஏப்.25 - பெரம்பலூர் அருகே திங்கட்கிழமை அதிகாலை நடந்த கொடூர சாலை விபத்தில் 2 லாரிகளுக்கு இடையே சிக்கிய காரில் பய ணம் செய்த ஒரே குடும் பத்தை சேர்ந்த 4 பேர் பலி யான சம்பவம் நிகழ்ந்துள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம்  சீர்காழியை சேர்ந்த வாய்க்கால் கால் தெருவை சேர்ந்த முனியப்பன் (48) பைனான்ஸ் தொழில் செய்து  வருகிறார். இவரது மனைவி  கலைவாணி (40), மகள் ஹரிணி (13), தாய் பழனி யம்மாள் (68) மகன் கார்முகி லன் (5) ஆகிய 5 பேரும் திங்கட்கிழமை அதிகாலை சொந்த ஊரான கரூருக்கு சென்று விட்டு, சீர்காழிக்கு மாருதி ஸ்விப்ட் காரில்  சென்றுக் கொண்டிருந்தனர். காரை முனியப்பன் ஓட்டி னார். கார் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திரு மாந்துறை டோல்கேட் அருகே சென்று கொண்டி ருந்தபோது, கேராளாவில் இருந்து கெமிக்கல் பவுடரை  ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற ஈச்சர் லாரி யின் பின்னால், பைனான்சி யர் முனியப்பன் ஓட்டிச் சென்ற ஸ்விப்ட் கார் நின்று கொண்டிருந்தது.

இந்நிலையில், தூத்துக் குடியில் இருந்து சுண்ணாம் புக்கல் ஏற்றிக் கொண்டு பரங்கிப்பேட்டை நோக்கி அதிவேகமாக சென்ற பாரத் பென்ஸ் லாரி, ஸ்விப்ட் காரின் பின்பகுதியில் அதி வேகமாக மோதியதில், நிலைகுலைந்த ஸ்விப்ட் கார் முன்னால் இருந்த லாரிக் கும், பின்னால் வந்த லாரிக் கும் இடையே சிக்கி விபத் துக்குள்ளானது.  எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த திடீர் கோர விபத்தில், காரில் இருந்த முனியப்பன், அவரது மனைவி கலை வாணி, மகள் ஹரிணி, தாய்  பழனியம்மாள் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். முனியப்பனின் மகன் கார்முகிலன் (5) மட்டும் கால்முறிவு ஏற்பட்டு  படுகாயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.  இதுகுறித்து, தகவல் அறிந்த வி.களத்தூர் போலீ சார், விபத்து மற்றும் தீய ணைப்பு மீட்பு படையினர் 2  மணி நேர போராட்டத்திற்கு பின்னர், காரில் இடிபாடு களில் சிக்கியவர்களை மீட்ட னர். கார்முகிலன் சிகிச்சைக் காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த ஏடிஎஸ்பி பாண்டியன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

;