districts

நூறு நாள் வேலை, கூலி வழங்குவதில் முறைகேடு குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

பெரம்பலூர். ஆக.10 - பெரம்பலூர் மாவட்டம் ஆலத்துர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு உள்ளே செல்லாமல் கூட்டத்தை புறக்க ணிக்கப் போவதாககூறி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான ஆலத்தூர் ஒன்றிய அமைப்பாளர் தமிழ்செல்வன் தலை மையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் இரண்டா வது செவ்வாய்கிழமை பிடிஓ தலைமையி லும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அல்லது திட்ட  அலுவலர் ஆகியோர் தலைமையில் குறைதீர்  கூட்டம் நடத்தப்பட வேண்டும்.  இந்த மாதம் மாவட்ட அதிகாரி தலைமை யில் நடைபெற வேண்டிய கூட்டம் அதிகாரி  வராததால், துணை வட்டார வளர்ச்சி அலு வலர் தலைமையில் நடைபெறுவதாக அறி விக்கப்பட்டது.  கடந்த இரண்டு மாதமாக இவரிடம்தான் நூறு நாள் வேலை முழுமையாக கிடைக்க வில்லை. சட்டக்கூலி நாள் ஒன்றுக்கு 281 ரூபாய் கிடைக்கவில்லை. அரசாணைப்படி நான்கு மணிநேர வேலை என்பதை மீறி,  அதிக நேரம் வேலை வாங்குவது. விதி முறையை மீறி இரண்டு கி.மீட்டர் கடந்து  பணி வழங்குவது மற்றும் உடல் குறைபாட்டை  காரணம் காட்டி வேலை வழங்க மறுப்பது ஆகிய குறைகளை தெரிவித்தும் எந்த நடவ டிக்கையும் இல்லை.  இந்நிலையில் புதன்கிழமை அன்றும்  இவரது தலைமையிலேயே கூட்டம் நடை பெறுவதை அறிந்த மாற்றுத்திறனாளிகள், கூட்ட அரங்கிற்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கிருந்த ஊழியர், அதிகாரி கள் முன்னிலையிலேயே உடல் ஊனத்தை  காரணம் காட்டி உங்களால் வேலை செய்ய  முடியாவிட்டால், எதற்கு வேலைக்கு வர  வேண்டும் என பேசியதால், அதிகாரிகளுக் கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர் அதிகாரி களை கண்டித்து முழக்கம் எழுப்பியவாறு கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.  மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், துணை  அமைப்பாளர்கள் பி.ரமேஷ், ரேவதி, சன்னாசி, முருகேசன், சுதாகர் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

;