districts

img

10 மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மதுரை, பிப்.28- மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் சிறப்பு பெட்டிகளை திறக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி 10 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திங்களன்று தென்னக ரயில்வே அலு வலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது.  மதுரை தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் அருகில் நடை பெற்ற போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் தோ.வில்சன் தலைமை வகித்தார். மாநில செயலாளர்களில் ஒருவரான எஸ்.பகத்சிங், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜெபஸ்டின், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் மனோகர ஜெஸ்டிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  போராட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டி.நாகராஜன், செய லாளர் டி.குமரவேல், புறநகர் மாவட்ட செயலாளர் வி.முருகன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் செல்வநாயகம், விருதுநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் உட்பட மதுரை மாநகர் - புற நகர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக் குடி, தென்காசி, திருநெல்வேலி, கன் னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.  போராட்டத்தில், கொரோனா வைக் காரணம் காட்டி இரண்டு ஆண்டுகளாக இணைக்காமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளை அனைத்து ரயில்களிலும் இணைத்திட வேண்டும், அனைத்து ‘‘எல்டிஎஸ்’’ கவுண்டர்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பயணச்சீட்டு உடனடியாக வழங்கிட வேண்டும், அடையாளச் சான்று ஆன் லைன் முன்பதிவுக்கு தனியாக அடை யாளச் சான்று வாங்கச் சொல்லி சட்ட விரோதமாக அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும், அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளி கள் வண்டிகளை நிறுத்த சிறப்பு பார்க்கிங் இடத்தை உருவாக்க வேண்டும், நடைமேடை பேட்டரி வண்டிகளில் சட்டவிரோதமாக கட்ட ணம் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டன.

;