districts

img

முத்தியால்பேட்டை சிறுமிக்கு புதுவை மக்கள் கண்ணீர் மல்க பிரியா விடை

புதுச்சேரி, மார்ச் 7- முத்தியால்பேட்டை சோலை நக ரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கை, கால்  கள் கட்டப்பட்ட நிலையில் ஓடையில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்ப வம், புதுச்சேரி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமி பாலியல் வன்கொலை செய்  யப்பட்டிருப்பதாக வலுவான குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூராய்வைத் தொட ர்ந்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த் தைக்கு பின்னர் சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

இறுதி அஞ்சலிக்காக வீட்டு வாச லில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உட லுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக் கள் அஞ்சலி செலுத்தினர்.

சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் இரா. ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் வி. பெருமாள், பிரபுராஜ், சீனி வாசன், சத்தியா, நகரச் செயலாளர் மதி வாணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் இளவரசி, சரவணன், ஆனந்த், சஞ்சய்  உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.  சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி மாநில டிஜிபி சீனிவாசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சிறுமியின் உடல் வாகனத்  தில் முத்தியால்பேட்டை, சோலை நகர்  வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல் லப்பட்டு சோலை நகர் பாப்பம்மாள் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக கடலோரப் பகு திகள் மற்றும் ஊர்வலம் சென்ற பகுதி களில் ஏராளமான போலீசார் குவிக்கப்  பட்டிருந்தனர்.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி மாநில சமூக ஆர்வ லர்கள் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும், போதைப்  பொருள் புழக்கத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

கடையடைப்பு
சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு  உழவர்கரை வியாபாரிகள் சங்கம் மற்  றும் மூலக்குளம் வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை காலை 8 மணி  முதல் 12 மணி வரை இந்திரா சிக்னல் முதல் அரும்பார்த்தபுரம் பாலம் வரை  கடையடைப்பு போராட்டம் நடை பெற்றது.

இன்று முழு அடைப்பு
இதனிடையே, சிறுமி பாலியல் வன்  கொலையைக் கண்டித்தும், புதுச்சேரி யில் அதிகரித்துள்ள வரும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கத் தவறிய என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு எதிராகவும் ‘இந் தியா கூட்டணி’ கட்சி சார்பில், வெள்  ளிக்கிழமையன்று (மார்ச் 8) புதுச்சேரி யில் முழு அடைப்புப் போராட்டம் நடை பெறுகிறது.

அதிமுகவும் முழு அடைப்பு போராட்  டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

விசாரணை துவக்கம்
இதனிடையே, சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலை மையில் சிறப்புக் குழுவை புதுச்சேரி  அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு,  சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவ லில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசா ரணை மேற்கொண்டுள்ளது.

வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு
இந்நிலையில், புதுச்சேரி வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் குமரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “குற்றவாளி களுக்கு மரண தண்டனை கொடுக்கும் வகையில், காவல் துறையானது உரிய  வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த  கொடுங்கொலையைச் செய்த குற்ற வாளிக்கு ஆதரவாக புதுவையில் உள்ள வழக்கறிஞர்கள் யாரும் ஆஜ ராகக் கூடாது என்று முடிவு எடுத்து உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சிறுமியின் உடற்  கூராய்வு அறிக்கை அரசிடம் சமர்ப் பிக்கப்பட்டிருப்பதாகவும் அதில், பாலி யல் வல்லுறவு செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்  யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.