புதுச்சேரி,ஏப்.15- இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புதுச்சேரி பிரச்சாரத்தில் உறுதி அளித்தார்.
இந்தியா கூட்டணியின் சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகு தியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கத்தை ஆதரித்தும் கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட மைதானத்தில் பிரச் சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே பங்கேற்று பேசுகை யில், “புதுச்சேரி மாநிலம் விடுதலைப் போராட்டத்தின் போது எண்ணற்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்த இடம். அத்தகைய புதுச்சேரிக்கு, இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.
ஆட்சி கவிழ்ப்புக்கு 440 எம்எல்ஏக்கள்!
“நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் எதிர்க் கட்சிகள், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 440 சட்டமன்ற உறுப்பினர் களை மிரட்டி ஆட்சிக் கவிழ்ப்பு செய்துள்ளது பாஜக. குதிரை பேரம், மிரட்டல், உருட்டல் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி வருகிறது. மேலும், ஆளுநர்கள் மூலம் போட்டி அரசி யலையும் நடத்துகிறது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாஜக அரசை விரட்ட மக்கள் தயார்
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கொடுப் போம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம், விவ சாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை நிர்ணயிக்கப் படும் என்றெல்லாம் பத்தாண்டு களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு பிர தமர் மோடி கேரண்டி கொடுத்தார். இதில் ஒன்றை அவர் நிறைவேற்ற வில்லை என்று கடுமையாக சாடிய கார்கே, மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப நாடு முழுக்க மக்கள் தயா ராகிவிட்டனர் என்றும் தெரிவித்தார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத் தில் வேட்பாளர் ஆர்.வைத்தி லிங்கம், காங்கிரஸ் மேலிட பொறுப் பாளர் அஜய் குமார், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி வன்னியரசு, முன் னாள் முதல்வர் வி.நாராயண சாமி, திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.