districts

img

புதுச்சேரி அதிமுக போராட்டம் படுதோல்வி

புதுச்சேரி, டிச.28- ஒன்றிய உள்துறை அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகள் தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றன. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சி நிர்வாகி கள் மாநில உரிமை பிரச்சனை குறித்து பேசமால் மவுனம் காத்து வருகின்றன. மாநில அந்தஸ்து வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் ஒன்றிய பாஜக அரசை அம்பலப்படுத்தும் வகை யில் மதச்சார்பற்ற கட்சிகள் தொடர் இயக்கங்களுக்கு திட்ட மிட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக எடப்பாடி அணியின் முன்னான் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையிலான பிரிவினர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி புதன்கிழமை (டிச.28) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால், அதன் கூட்டணியான பாஜகவும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் வாய்மூடி மவுனியாக இருந்தனர். எதிர்ப்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம் சக்தி சேகர் தலைமையிலான அதிமுகவினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள், ஜனநாயக அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை.
பேருந்து மீது கல்வீச்சு
இந்த போராட்டத்தையொட்டி தனியார் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. புதுவை அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லைகளுக்குள் இயக்கப் பட்டது. அதே நேரத்தில், புதுவையி லிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்தி லிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மாநில எல்லை வரைக்கும் இயக்கப்பட்டன. வழக்கம் போல் ஆட்டோக்கள், டெம்போக்கள் இயங்கின. பெரும்பாலான உணவு விடுதிகள், பொழுதுபோக்கு வளாகங்கள் வழக்கம் போல் இயங்கின.தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு, திருபுவனை, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டைகள் இயங்கியது. ஒன்றிய, மாநில அரசு அலு வலகங்கள் வழக்கம்போல் இயங்கியது. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. கல்லூரிகள் வழக்கம்போல இயங்கியது. கல்லூரி மாணவர்களுக்கான பேருந்துகளும் இயக்கப்பட்டது. புதுச்சேரியிலிருந்து கடலூர், சென்ற தமிழக அரசு பேருந்து முதலியார் பேட்டையில் செல்லும்போது, பேருந்து பின்புறமுள்ள கண்ணாடி மீது அடையாளம் தெரியாதவர்கள் கல் வீசி தாக்கியதால் பேருந்து கண்ணாடி சேதமானது. அதே போல் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களில் டெம்போ உட்பட 9 வாக னங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

;