districts

img

புதுக்கோட்டை கோ-ஆப்டெக்சில் ரூ.1.30 கோடி விற்பனை இலக்கு

புதுக்கோட்டை, அக்.1 - புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.30 கோடி  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள் ளார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெள்ளிக்கிழமை துவக்கி வைத்துப் பேசுகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறு வனம் தீபாவளி பண்டிகையின் போது  தமிழக அரசு வழங்கும் 30 விழுக்காடு சிறப்புத்  தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகிறது.  இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடி வமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி,  திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி  செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை  கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புட வைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத் தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்பு கள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி,  துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி  ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன. தீபாவளி 2022-க்கு ரூ.1.30 கோடி  விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவ னம், ‘கனவு நனவு திட்டம்’ என்ற சேமிப்பு  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

;