districts

இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, மே.26:-  புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 27 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளதாவது: படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு மே 27 (வெள்ளிக்கிழமை) அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது. இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளை ஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளை ஞர்களும் தங்களது சுய விவரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன் ்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் ‘‘தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்’’ https://www.tnpriva tejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.