districts

img

பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் எம்.சின்னதுரை எம்எல்ஏ

புதுக்கோட்டை, மே 19-  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை, புதுக்கோட்டை ஒன்றியங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு திட்டப் பணிகளுக்கு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரை வியாழனன்று அடிக்கல் நாட்டினார். கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் கலையரங்கம், காட்டுநாவல் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடை கட்டுவதற்கும், புதுக்கோட்டை ஒன்றியம் வளவம்பட்டி கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டுவ தற்கும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை அடிக்கல் நாட்டினார். நிகழ்வுகளில் ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் ரெத்தினவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல், டி. லட்சாதிபதி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆறுமுகம் (நெப்புகை), ஆரஞ்சுப்பாப்பாகுணாளன்(காட்டுநாவல்), பாமா பால முருகன் (வளவம்பட்டி), சிபிஎம் ரெங்க ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;