districts

img

அறுவை சிகிச்சை அரங்கில் செக்லிஸ்ட் டிஜிட்டல் முறை அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை, நவ.24-  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட  அரசு தலைமை மருத்துவ மனை அறுவை சிகிச்சை அரங்கில் செக்லிஸ்ட் டிஜிட்  டல் முறையில் திரையிட நட வடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட் டம் ஆதனக்கோட்டையில் ரூ.2.13 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை வியாழ னன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திறந்து வைத்தார்.  அப்போது அமைச்சர் பேசுகையில், ‘‘2017-ஆம் ஆண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்  டது. அதுவரை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அரசு தலைமை மருத்துவமனை அதே இடத்தில் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். சம்பந்தப்பட்ட மருத்துவ மனையை தாலுகா மருத்துவ மனையாக இன்னும் ஒரு  மாத காலத்திற்குள் போதிய மருத்துவர்கள் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அதே இடத் தில் மீண்டும் செயல்படும்.  தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை மாவட்டங்க ளில் உள்ள அரசு தலைமை  மருத்துவமனை என அறுவை சிகிச்சை நடைபெறும் மருத் துவமனைகளில் அறுவை சிகிச்சை அரங்கில் செக்லிஸ்ட் டிஜிட்டல் முறையில் திரை யிட வருங்காலங்களில் நட வடிக்கை எடுக்கப்படும்,  எம்ஆர்பி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் செவி லியர்கள் படிப்படியாக பணி  நிரந்தரம் செய்யப்படுவார் கள். தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள 708 இடங்களில் நகர்ப்புற நல வாழ்வு மையம் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. அங்கு  ஒரு மருத்துவர், ஒரு செவி லியர், ஒரு மருந்தாளுநர், ஒரு உதவியாளர் என நான்கு பேர் பணி அமர்த்தப்படுவர்.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலை மை வகித்தார். சட்டமன்ற  உறுப்பினர்கள் எம்.சின்ன துரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா (புதுக் கோட்டை) உள்ளிட்ட ஏராள மான கலந்து கொண்டனர்.  முன்னதாக சுகாதாரத் துறை சார்பில் அமைக்கப்பட் டுள்ள பல்வேறு வகையான அரங்குகளை பார்வை யிட்டார்.

;