districts

அடகு வைத்த நகைக்குப் பதில் வேறு நகையை கொடுத்ததால் அதிர்ச்சி நல்லூர் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

பொன்னமராவதி, ஜூன் 5- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி அருகே நல்லூர் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கத்தில் நல்லூர், வாழைக் குறிச்சி, நெருஞ்சிகுடி, கூடலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் தங்கள்  நகைகளை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.  இதில் கிருஷ்ணன் என்பவர் அவரது மகளின் நகைகளை வைத்து நகை கடன் பெற் றுள்ளார். இந்த நிலையில் தனது மகளின் திரு மணத்திற்காக நகைகளை திருப்ப செவ்வா யன்று வந்துள்ளார். அப்போது அவரது நகை களை வங்கி ஊழியர்கள் சோதித்த போது,  இரண்டு நகைகள் இல்லாததால் அதற்கு பதில்  வேறு நகைகளை கொடுத்து சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.  இது போன்று ஊர் பொதுமக்கள் நகையும்  தொலைந்து போயிருக்கலாம் என்று கருதிய கிருஷ்ணன் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பதிவிட்டார். இதனால் பீதிய டைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முற்றுகையிட்டு அங்கிருந்த வங்கி ஊழியர்களிடம் தங்கள் நகைகளை காட்டுமாறு கூறி முற்றுகையிட்டனர்.  இதற்கு பதிலளித்த வங்கி நிர்வாகம் மக்க ளுடைய அனைத்து நகைகளும் பத்திரமாக இருப்பதாகவும் எப்போது வேண்டும் என்றா லும் திருப்பிக் கொள்ளலாம் என்று வங்கி தரப்பில்  தெரிவித்தனர். இதில் சமாதானமடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.