புதுக்கோட்டை, ஏப்.11 - திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியின் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை. வைகோவை ஆதரித்து கந்தர்வ கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் அவர் பேசியதாவது:
கபட நாடகம்
தேர்தலுக்காக கபட நாடகம் ஆடிவரும் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு செய்த நன்மைகளை பட்டியலிடத் தயாரா? 80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் சுமை வைத்திருக் கும் மோடி, அதிலிருந்து நாட்டு மக்க ளுக்குச் செய்தது என்ன? ஏழை வீட்டுப் பிள்ளைகளின் கல்விக் கடனை ரத்து செய்ததா? விவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டதா? நீங்கள் வாக்குறுதி அளித்தபடி, விவசாயி களுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைத்ததா? 30 லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப முடிந்ததா?
திசை மாறும் காற்று
வட இந்தியாவில் காற்று திசை மாறி வீசத்தொடங்கி உள்ளது. பாஜக போட்டியிடும் இடங்களே மொத்தம் 417-தான். இதில் தமிழ் நாட்டில் போட்டியிடும் இடங்களும் அடக்கம். ஆனால், 400-இடங் களுக்கு மேல் வெற்றி பெறுவார் களாம். வடமாநிலங்களில் பல தொகு திகளில் பாஜக கூடாரம் காலியாகி வருகிறது. இதுவரை 12 பாஜக வேட் பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். அதனால்தான் மோடி தென்னிந்தியாவை நோக்கி ஓடி வருகிறார். பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள மோடியின் முகத்திரை இந்தத் தேர்தலில் கிழித்தெறியப்படும்.
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவும், கஜானாவை காலி செய்துவிட்டு சென்றதோடு, கடன் சுமையை அதி கரித்து விட்டுச் சென்றது. அதன் பிறகு, 3 ஆண்டுகளில் திமுக ஆட்சி யில் நகைக்கடன், சுய உதவிகுழுக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி, பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளது.
அதிமுகவை மக்கள் நம்புவார்களா?
பத்து ஆண்டுகளாக மோடி அர சின் அத்தனை மக்கள் விரோதச் சட்ட ங்களையும் ஆதரித்துவிட்டு, தற் போது விலகி நிற்பதாகச்சொல்லும் அதிமுகவை தமிழ்நாட்டு மக்கள் நம்பு வார்களா? இவர்கள் ஓட்டுப் போட்டுத் தானே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தல் நேரத்தில் மட்டும் தனியாக நின்றால் சிறுபான்மையினர் உங்களுக்கு ஓட்டுப் போடுவார்களா?
அதிமுகவுக்கு செலுத்தும் வாக்கும், பாஜகவுக்கு செலுத்தும் வாக்கும் ஒன்றுதான். கடந்த தேர்த லில் இரு கட்சியினரும் கூட்டணி வைத்து தோற்றார்கள். இத்தேர்த லில் பிரிந்து நிற்பதால் படுதோல்வி யைச் சந்திப்பார்கள். பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சியினரும் டெபாசிட்கூட வாங்க மாட்டார்கள். அதிமுகவும், பாஜகவும் 2-வது இடத்துக்காக போட்டியிடுகின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற் றோம். அப்பொழுது உங்களிடம், நாங்கள் தந்த வாக்குறுதிகளை நிறை வேற்றி வருகிறோம். அதுமட்டுமல்ல; உங்களால் தேர்வு செய்யப் பட்ட சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை தொகுதி மக்களுக் காக மட்டுமல்லாமல், மாவட்ட மக்க ளுக்காகவும் ஒட்டுமொத்த தமிழ் நாட்டு உழைப்பாளி மக்களுக்காக வும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கடமையாற்றி வரு கிறார்.
எனவே, இந்தத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் துரை.வைகோ-வுக்கு தீப்பெட்டி சின்னத்தில் அதிக வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். கூட்டத்திற்கு கட்சியின் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றி யச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் வரவேற்றார்.
மாநிலக்குழு உறுப் பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், மதிமுக மாநில துணைச் செயலாளர் ஆடுதுறை முருகன், சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலா ளர் வி.மு.வளத்தான், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் உள்ளிட்டோர் பேசி னர். பொதுக் கூட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.