புதுக்கோட்டை, பிப். 12 - புதுக்கோட்டை மாவட் டம் வேங்கைவயல் பட்டி யலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை சிபிசிஐடி போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை அதிகாரி யாக திருச்சியைச் சேர்ந்த துணை காவல்கண்காணிப் பாளர் பால்பாண்டி இருந்தார்.
இந்நிலையில், விசார ணை அதிகாரி பால்பாண்டி மாற்றப்பட்டுள்ளார். அவ ருக்குப் பதிலாக தஞ்சைத் துணை காவல் கண்காணிப் பாளர் கல்பனா நியமிக்கப் பட்டுள்ளார்.
உடல்நலக் குறைவால் பால்பாண்டி நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்து வந்த நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித் தனர்.