districts

img

மணமேல்குடி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதியில் தாலுகா நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்திடுக! அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை

அறந்தாங்கி, ஆக.17 - அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தின் முதல் மாநாடு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரஞ்சிதம் மஹா லில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வழக் கறிஞர் அலாவுதீன் தலைமை வகித் தார். அறந்தாங்கி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருமயம் ஆகிய பகுதிகளிலிருந்து வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.  மாநாட்டில் 17 பேர் கொண்ட மாவட் டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவ ராக சிவராசு, செயலாளராக அலா வுதீன், பொருளாளராக சேக்ராவுத்தர், துணைத் தலைவராக தங்கப்பா, துணைச் செயலாளர்களாக காயத்ரி மற்றும் தீபா தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தின் தமிழ்நாடு மாநில பொதுச் செய லாளர் முத்து அமுதநாதன் சிறப்புரை யாற்றினார்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பயிற்சி பெற்ற நீதிமன்ற அலுவலக பணி யாளர்களை நியமிக்க வேண்டும். நீதிமன்றங்களில் பொதுமக்கள் நல னுக்காக இருக்கைகள் மற்றும் காத்தி ருப்பு அறைகளை உருவாக்க வேண்டும். அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கூடுதல் அமர்வு நீதிமன்ற மும், ஜெ.எம்.லெவல் கூடுதல் மகிளா நீதிமன்றமும் அமைக்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு அரசு வழங்கும் ரூ.3000 பயிற்றுத் தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஒன்றிய அரசு குற்றவியல் நடை முறை சட்டங்களில் கொண்டு வரக்கூடிய திருத்தங்களை அனைத்து மாநில மொழிகளிலும் மொழி பெயர்த்து  வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களி டம் கருத்துக் கேட்டு, சட்ட வல்லு நர்கள் கொண்ட குழுவின் மூலம் சட்டத்  திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மாலிமத் கமிட்டியின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு முழுவதும் நிராகரிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மண மேல்குடி, ஆவுடையார்கோவில், பொன் னமராவதியில் தாலுகா நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்ததை உடனடியாக நிறை வேற்றிட வேண்டும். வழக்கறிஞர் சேம நல நிதியை ரூ. 7 லட்சத்திலிருந்து, ரூ.  10 லட்சமாக உயர்த்திய தமிழக அரசிற்கு  இம்மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

;