districts

ஏனமேடு மக்கள் பயன்படுத்தும் மயானத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யக் கூடாது மார்க்சிஸ்ட் கட்சி, பொதுமக்கள் மனு

பொன்னமராவதி, டிச.4- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி ஒன்றியம் பி.உசிலம்பட்டி ஊராட்சி யில் உள்ள ஏனமேட்டில் மக்கள் பயன்படுத் தும் பொது மயானத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்ய கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொது மக்கள் சார்பதிவாளர் ஆர்.மாரீஸ்வரியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘‘பி.உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள ஏனமேடு பகுதியில் சர்வே எண் 378/6 அரசுக்கு சொந்தமான இடத்தை பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் பொது  மயானமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்ய   செல்லும்போது அந்த இடம் எனக்கு சொந்த மான இடம் என்றும் எனக்கு பட்டா உள்ளது  என்றும் கூறி ராமசாமி என்பவர் தகராறு செய்தார்.  இதுதொடர்பாக போராட்டம் நடத்திய நிலையில், வட்டாட்சியர் மற்றும் காவல்  ஆய்வாளர் முன்னிலையில் அதே மயானத் தில் உடலை அடக்கம் செய்தோம். பிறகு நீதி மன்றம் சென்று வழக்கை தள்ளுபடி செய்து  விட்டனர்.  தற்போது, ஆர்டிஓ முன்பு வழக்கு நிலு வையில் உள்ள நிலையில், ராமசாமி தீர்ப்பு  தனக்கு சாதகமாக வந்துவிட்டது என பொய்யான தகவலை கூறிக்கொண்டு பண பலம் மற்றும் அரசியல் பலம் கொண்ட நபர்களிடம் அந்த மயானத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வருகிறது. எனவே, பொது மயா னத்தை பத்திரப்பதிவு செய்யக் கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ். நல்லதம்பி, கே.குமார் தலைமையில் விவசாய சங்க ஒன்றியத் தலைவர் எம்.ராம சாமி, ஊர் பொதுமக்கள் சார்பில் வி.தொ.ச  நிர்வாகி ஜே.மணிமேகலை, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.ஆனந்த், ஏ.ஆர். பெரி யண்ணன், ஆர்.பொன்னுச்சாமி ஆகியோர் மனுவினை வழங்கினர்.

;