தேசிய அறிவியல் தினம்
நாமக்கல், மார்ச் 1-
குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தேசியஅறிவியல் தினம் கொண்டாடடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவி யல் தினம் தலைமையாசிரியை கவுசல்யாமணி தலை மையில் கொண்டாடப்பட்டது. அறிவியல் பட்டதாரி ஆசி ரியர் அன்பரசன், தேசிய அறிவியல் தினம் ஏன் கொண்டா டுகிறோம்? சர்.சி.வி.ராமனின் ஒலி சிதறல் விளைவு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் அறிவியல் பரிசோதனைகள் செய்து காண் பித்தனர். வானவில் மன்ற கருத்தாளர் குணசேகரன். விநாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
தெருநாய் கடித்து மான் படுகாயம்
சேலம், மார்ச் 1- சேலம் மாவட்டம், வாழப் பாடி அருகே கோதுமலை, நெய்யமலை, அருநூற்று மலை, சந்துமலை, வெள்ளி மலை, மண்ணூர் மலை உள் ளிட்ட வனப்பகுதிகளில், ஏரா ளமான புள்ளிமான்கள் உள் ளன. கடந்த 3 மாதங்களாக வறட்சி நிலவி வருவதால், தண்ணீர் தேடி அருகிலுள்ள கிராமத்திற்குள் புள்ளிமான் கள் நுழைவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வியாழனன்று வனப்பகுதி யில் இருந்து 2 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று, துக்கியாம்பாளையம் பனந் தோப்பு பகுதியில் புகுந்தது. இந்தமானை தெருநாய்கள் கடித்ததில் படுகாயமடைந் தது. இதனையடுத்து மானை மீட்ட விவசாயி காமராஜ், முத லுதவி செய்த பின், மாரியம் மன் புதூர் வனக்குழுத் தலை வர் முருகன் வாயிலாக வாழப் பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
நகர்மன்ற கூட்டம்
தருமபுரி, மார்ச் 1- தருமபுரி நகர்மன்றக் கூட்டம், அண்ணா கூட்டரங் கில் தலைவர் லட்சுமி மாது தலைமையில் நடைபெற் றது. நகர்மன்றத் துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையர் புவ னேஸ்வரன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 33 வார்டுகளிலும் சாலைப் பணிகள், சமுதாயக் கூடம் சீரமைத்தல், குடிநீர் குழாய் கள், கழிப்பிடங்களை சீர மைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளை ரூ.3 கோடி மதிப் பில் மேற்கொள்வது உள் ளிட்ட 51 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.