districts

img

அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு குமரியில் வாலிபர் சங்க ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜுன் 22- மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குமரி மாவட்டக்குழு சார்பில் புதனன்று (ஜுன் 22) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட், துணைத்தலை வர் ஷாஜி, நிர்வாகிகள் பிரவீன், லிபின் ராஜ், சிந்து உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.