districts

காலரா நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாகை ஆட்சியர் அறிவுரை

நாகப்பட்டினம், ஜூலை 4- நாகப்பட்டினம் மாவட்டத்தில் வயிற்றுப் போக்கு (காலரா நோய்) ஏற்படாமல் இருக்க  நகராட்சி மற்றும் சுகாதார துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அரு காமை மாவட்டமான காரைக்கால் மாவட்டத் தில் காலரா நோய் பரவி வருகிற காரணத் தால், காரைக்கால் மாவட்டத்தை ஒட்டிய அண்டை மாவட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்டத்தில் உள்ள மக்கள் அனை வரும் குறைந்தபட்சம் 20 நிமிடம் கொதிக்க  வைத்த  குடிநீரையே பருக வேண்டும். ஓஆர்எஸ் பவுடரை கையில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அதை எப்படி  பயன்படுத்த வேண்டும் என்று முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்.  வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் நோய் தொற்று யாருக்கேனும் தென்பட்டால் உடனடியாக  அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ மனையை அணுக வேண்டும்.  அரிசிக்கஞ்சி, இளநீர், கொதிக்க வைக்கப் பட்ட நீர் ஆகியவற்றை பருகலாம். குடிநீர்  குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனடி யாக சம்பந்தப்பட்ட துறைக்கு பொதுமக்கள்  தகவல் தெரிவிக்க வேண்டும். பொது கழிப் பறையை பயன்படுத்துவோர் கூடுதல் கவ னத்துடன் இருக்க வேண்டும். நோயாளி களைக் கவனித்துக் கொள்பவர்கள் கை களை நன்கு கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி யர் மருத்துவர் அருண் தம்புராஜ் அறிவுறுத் தியுள்ளார்.

;