districts

துளசியாப்பட்டினம் அவ்வையார் கோவிலுக்கு மணிமண்டபம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வேதாரண்யம், மே 6 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த துளசி யாப்பட்டினம் பகுதியில் ஔவையார் விசுவநாதர் கோவில்  உள்ளது. இக்கோவிலுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். புதனன்று சட்டசபையில் நடந்த அறநிலையத் துறை  மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் சேகர் பாபு,  “நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வண்டுவஞ் சேரியை அடுத்த துளசியாப்பட்டினம் ஔவையார் கோவி லுக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும்” என அறிவித்தார். இதனையறிந்த கிராம மக்கள் வெள்ளியன்று அவ்வையார் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, இனிப்பு  வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அவருக்கு  மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதலமைச் சர், அமைச்சர் சேகர்பாபு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்  தம்புராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

;