districts

img

மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் முறையை அமல்படுத்துக! சிஐடியு நாகப்பட்டினம் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

நாகப்பட்டினம், செப்.25 - இந்திய தொழிற்சங்க மையத்தின் நாகப்பட்டினம் மாவட்ட 14-வது மாநாடு அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் மாவட்ட குழு உறுப்பினர் பி.செல்வ ராஜ் மாநாட்டு கொடியை ஏற்றி வைக்க,  மாவட்டத் தலைவர் பி.ஜீவா தலைமை உரை யாற்றினார். மாவட்ட துணை செயலாளர் எஸ்.சிவகுமார் அஞ்சலி தீர்மானம் வாசிக்க எம்.குருசாமி வரவேற்புரை ஆற்றி னார். சிஐடியு மாநில துணைத் தலைவர்  ஏ.கிருஷ்ணமூர்த்தி துவக்க உரையாற்றி னார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி மாநாட்டை வாழ்த்திப் பேசி னார். சிஐடியு மாநில துணைத் தலைவர் கே. விஜயன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.செல்வகுமார் நன்றி கூறினார்.  தமிழக அரசு தற்போது மின்சார கட்ட ணத்தை உயர்த்தி உள்ளது. மாதந்தோ றும் கட்டணம் செலுத்தும் முறை கையாளப் படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அமல்ப டுத்த வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் இப்பகுதியில் கிடைக்கும் வைக்கோலை பயன்படுத்தி, அதன் மூலம் உற்பத்தி தொடங்க ஒரு தொழிற்சாலை துவங்க வேண்டும். விரிவாக்கப்பட இருக்கும் சி.பி.சி.எல் நிறு வனம் உடனடியாக உற்பத்தியை துவங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட  வேண்டும். காரைக்கால், பொறையார், திருக்கடையூர், சீர்காழி வரை புதிய ரயில்  திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். கடற்கரைப்  பகுதி கிராமங்களை ஒன்றிணைத்து ஒரு  மாம்பழக் கூழ் ஆலை அமைக்கத வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய தலைவராக ஏ.சிவனருட் செல்வன், செயலாளராக கே.தங்கமணி, பொருளாளராக என்.வெற்றிவேல் உட்பட 35  மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

;