districts

img

தேர்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுக! அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மே 9 - சட்டமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என்று பேசியதைக் கண்டித்தும், தேர்தல் வாக்கு றுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்  நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யும் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கம் நாகப் பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய மூன்று வட்டங்களில் உள்ள அரசு அலுவல கங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் ப.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பா.ராணி விளக்க வுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அ.தி. அன்பழகன் சிறப்புரையாற்றினார். நாகை தொழிற் சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார் நிறை வுரையாற்றினார். 

தஞ்சாவூர்
தஞ்சையில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலை யம், வணிக வரித்துறை அலுவலகம், கால்நடைத்  துறை அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவல கம், வேளாண் துறை அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலா ளர் எஸ்.கோதண்டபாணி, முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் பி.அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் கண்டன உரையாற் றினார். ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட தலைவர் கை.கோவிந்தராஜன், கூட்டுறவுத்துறை சங்கம் கே.சித்திரவேலு, சத்துணவுத் துறை சங்கம் திருச்செல்வன் உள்ளிட்ட பலர் பேசினர்.

திருச்சிராப்பள்ளி 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துறையூர்  வட்டம் சார்பில் திங்களன்று துறையூர் ஒன்றிய  அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமை  வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சாலை பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன், வட்ட செயலாளர் குமார், அனைத்து  துறை ஓய்வூதியர் சங்க சந்திரன் ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர் சங்கத்தி னர் மற்றும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம்
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவ மனை, அறநிலையத்துறை அலுவலகம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவல கங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட  பொறுப்பாளர்கள் சாந்தா ராமன், ஏ.விஸ்வேஸ் வரன் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் மதியழகன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செய லாளர் ராஜகோபாலன், மாவட்ட துணை தலைவர்  அன்புமணி, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.