தேனியில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா திங்களன்று ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலையத்தைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டும். தினந்தோறும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.