districts

பெரியாற்றிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

பெரியாற்றிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

தேனி, அக்.25- தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு  நாட்களாக பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித துள்ளது.  புதன்கிழமை காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் தற்  போது 61.025 அடியாக உயர்ந்துள் ளது. அணைக்கு நீர்வரத்து 1379 கன  அடியாக உள்ளது. மதுரை மாவட்ட  குடிநீருக்கு 69 கன அடி திறக்கப்படு கிறது. முல்லைப் பெரியாறு அணை யின் நீர்மட்டம் 123.95 அடியாக உள்ளது. நீர்வரத்து 1617  கனஅடி நீர் வருகிறது. 

அக்.30- தேவர் ஜெயந்தி: முதல்வர் நேரில் அஞ்சலி

அக்டோபர் 30 அன்று தேவர்  ஜெயந்தி அன்று, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் முதல்வர், மதுரையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். பின்னர் அங்கிருந்து சாலை வழியாக பசும்  பொன் செல்வார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, பிரபல ரவுடியான கருக்கா  வினோத் என்பவரை கிண்டி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய வினோத்தை, ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்து காவல் அதிகாரிகள் விரட்டி பிடித்து கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வு குறித்து கிண்டி காவல்நிலையத்தில் தீவிர  விசாரணை மேற்கொண்டு காரணத்தைக் கண்ட றியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா  வினோத் பல்வேறு குற்றப்பின்னணி கொண்டவர் என்பதும், சிறையில் இருந்து விடுதலையாக ஆளுநர் தாம தம் செய்ததால் பெட்ரோல் குண்டை வீசியதாகவும் தெரிய வந்துள்ளது.

2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு

2222 பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று  ஆசிரியர் தேர்வு  வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வாரியம்  வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.   இந்த பணியிடங்களை நிரப்பு வதற்கான போட்டித்தேர்வு வருகிற  ஜனவரி மாதம் 7-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க வருகிற  நவம்பர் 1-ந்தேதி முதல் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ந்தேதி ஆகும். தமிழுக்கு  371 காலி பணியிடங்களும், ஆங்கிலத்துக்கு 214 பணியிடங்களும், கணிதத்துக்கு 200 பணியிடங்களும், இயற்பியலுக்கு 274 பணியிடங்களும், வேதியியலுக்கு 273 பணியிடங்களும், வரலாறுக்கு 346 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி இருக்க வேண்டும் என்று  அதில் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகிறது

சென்னை,அக்.25- வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்  டில் வலுவடைய தொடங்கியுள்ளது.  இதன் எதிரொலியால், வரும் 29ம் தேதி  தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 14  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 29ம் தேதி கடலூர்,  சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்  டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்ப லூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சா வூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.