districts

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு

தூத்துக்குடி, டிச.11- மாநில அளவிலான 30-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு  டிசம்பர் 10, 11 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் புனித அன்னை  தெரசா பொறியியல் கல்லூரியில் நடை பெற்றது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் தமிழ்நாடு அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கி ணைக்கிறது. இந்நிகழ்வின் துவக்கவிழா, சனிக்கிழமையன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ்  தலைமையில் துவங்கியது. விழா வினை சமூக நலன் மற்றும் மகளிர்  உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.  விழாவில் அறிவியல் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிர மணி, மாநில செயலாளர் எஸ்.டி.பால கிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பா ளர் பேராசிரியர் முனைவர் சுகுமாறன் ஆகியோர் பேசினர். அறிவியல் இயக்க மாநில தலைவர் எஸ்.தினகரன், மனோன்  மணியம் சுந்தரனார் பல்கலை. பதி வாளர் முனைவர் ஜி.அண்ணாதுரை, முனைவர் சாந்தகுமாரி, அறிவியல் இய‌க்க தூத்துக்குடி மாவட்டச் செய லாளர் பேராசிரியர் முனைவர்.செ. சுரேஷ்பாண்டி ஆகியோர் கலந்து கொண்  டனர். ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்வில், இஸ்ரோ துணை இயக்குநர் நாராயணன் அப்பு கலந்து கொண்டு குழந்தைகளிடம் விஞ்ஞான கருத்துக் களை பகிர்ந்து கொண்டார். குழந்தை களுக்கான அறிவியல் பரிசோதனை கள், கணித நிகழ்வுகள், மொழி செயல்  பாடுகள், மந்திரமா தந்திரமா?, மேஜிக் நிகழ்ச்சிகள் விளையாட்டுகள் என பல நிகழ்வுகள் நடைபெற்றன.

;