கரூர், டிச.17 - ஒன்றிய அரசின் அறி வியல் தொழில்நுட்ப துறையு டன் இணைந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட் டில் தேசிய குழந்தைகள் அறி வியல் மாநில மாநாட்டை நடத்தி வருகிறது. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச் சூழல் அமைப்பை புரிந்து கொள்ளுதல் என்ற கருப் பொருளை தலைப்பாக கொண்டு, 10 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாண வர்கள் இரண்டு பேர் ஒரு குழுவாக இருந்து, வழி காட்டி ஆசிரியர் உதவியு டன் பல்வேறு ஆய்வுகளை சமர்ப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டங் களான, குளித்தலை, கரூர் பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி கள் மற்றும் தனியார் பள்ளி களில் இருந்து 500 வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்து கொண்ட பயிற்சி முகாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில், பத்துக்கும் மேற்பட்ட அறி வியல் ஆய்வுகளை சமர்ப்பிக் கும் பள்ளிகளின் ஆய்வு களை அந்தந்த பள்ளிகளி லேயே தேர்வு செய்து, அவற்றை பரணி பார்க் பள்ளி யில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் சமர்ப்பித்தனர். இதில் சிறந்த 30 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டு, மாநில மாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடியில் டிசம்பர் 10, 11 ஆம் தேதி களில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சமர்ப் பித்த ஆய்வுகள் தேசிய அள வில் தேர்வு பெற்றன. இந்த ஆய்வு, டிசம்பர் 28,29 ஆம் தேதி குஜராத்தில் நடக்கும் தேசிய மாநாட்டில் சமர்ப்பிக் கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிக ஆய்வினை சமர்ப்பித்த பள்ளி என்ற பெருமையை பரணி பார்க் பள்ளியும், தமி ழகத்தில் அதிக ஆய்வு களை சமர்ப்பித்த மாவட்டம், கரூர் மாவட்டம் என்ற பெரு மையையும் பெற்று கரூர் மாவட்டம் சாதனை படைத் துள்ளது.
பாராட்டு விழா
தேசிய அளவில் தேர்வு பெற்ற மாணவிகளையும், மாநில மாநாட்டில் பங் கேற்று ஆய்வு அறிக்கை களை சமர்ப்பித்த மாணவ, மாணவிகளையும், வழி காட்டி ஆசிரியர்களையும் பாராட்டும் விழா கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளா கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாட்ஷா தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலா ளர் பொன் ஜெயராம் வர வேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என்.கீதா மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கி னார். மாவட்ட கல்வி அலு வலர்கள் ஆர்.மணி வண்ணன், பெ.கண்ணிச் சாமி, க.கனகராசு, துணை தலைவர் ஆரோக்கிய பிரேம் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.