districts

கனமழை எச்சரிக்கை

தூத்துக்குடி,டிச.30- இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அர பிக்கடல் பகுதிகளில் வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் தென்  மாவட்டங்களில் கனமழை பெய் யும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது.

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மறு  அறிவிப்பு வரும் வரை கடலுக்கு  செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது.

அதன்படி சனிக்கிழமை தூத்  துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் கரை யில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து தூத்துக் குடி மாவட்டத்தில் வேம்பார் முதல்  பெரிய தாழை வரையிலான மீனவ  கிராமங்களில்  400-க்கும் மேற்பட்ட  விசைப்படகுகள் 3000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் என சுமார் 5000 படகு கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லா மல் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.