districts

img

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தனித்தனி டிக்கெட் கவுண்டர்கள் ஏற்படுத்துக! சிபிஎம் கோரிக்கை

தூத்துக்குடி, மே 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரியிடம் அளித்த மனு விபரம் வருமாறு: தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி ஆகிய இரு மாவட்  டங்களை இணைக்கக் கூடிய முக்கிய நகர மாக கோவில்பட்டி உள்ளது. இங்கு இருக்  கும் மக்கள் வெளியூர் செல்வதற்கு கோவில்  பட்டி ரயில் நிலையத்தையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் கோவில் பட்டி ரயில் நிலையத்திலிருந்து வெளியூர் சென்று வருகின்றனர். ரயில் நிலையத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர்களில் ஒரே  நேரத்தில் முன்பதிவு மற்றும் முன்பதி வில்லா டிக்கெட் எடுக்கும் நடைமுறை உள்  ளது. இதனால் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து உடனடியாக பயணிக்கும் பயணி கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும்  கூட்டம் அதிகமாக இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாமல் ரயிலில் ஏற முடியாமல் நிலைமை உருவாகிறது. எனவே, கோவில்பட்டி ரயில் நிலை யத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இருந்ததைப் போல ரயிலில் முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு தனி கவுண்டர்களும் மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க வரும் பயணிகளுக்கு  தனி  கவுண்டர்களும் அமைக்கப்பட வேண்டும் என்று ரயில் நிலைய அதிகாரியிடம் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையத்தில் வெளிப் புறம் பயணிகளை வழி அனுப்ப வருகை  தரும் நபர்கள் வாகனங்கள் நிறுத்திட எவ் வித இடையூறுமின்றி அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரி ராஜேஷ் கூறும்போது கோவில்பட்டி ரயில் நிலை யத்தில் நிலைய மேலாளர் பொறுப்பு தற் போது கிடையாது என்றும் பொதுமக்கள் எந்தவித புகார் இருப்பினும் மதுரை மண் டல மேலாளரிடம் மட்டும் தெரிவிக்க முடி யும் என்றும் கூறினார். தங்களது கோரிக்கை கள் குறித்து மண்டல மேலாளர் அவர்களி டம் தெரிவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.  இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றிய செயலா ளர் தெய்வேந்திரன் மற்றும் வாலிபர் சங்க  நிர்வாகி தினேஷ்குமார் ஆகியோர் இருந்த னர்.

;