districts

img

திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவாரூர், மார்ச் 15-  திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு ஆழித்தேரோட்டம், ஆரூரா, தியாகேசா  கோஷங்கள் முழங்க  காலை புறப்பட்டது. நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் ஆழித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே இரண்டாவது ஆவது பெரிய தேர் எனும் சிறப்புக்குரியது. இந்த தேரானது, 96 அடி உயரமும், 360 டன் எடையையும் உடையது. இந்த தேரில் 63 நாயன்மார்களின் புராணச் சிற்பங்கள், பெரிய புராணம், சிவபுராண காட்சிகள் உள்ளிட்டவை, மரச்சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் தியாகராஜர் கோ யில் பங்குனி உத்திரத் திருவிழா வையொட்டி இந்த ஆழித்தேரோட் டம் நடைபெற்று வருகிறது. ஆழித் தேரோட்ட விழாவை திருநா வுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப் பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரி விக்கிறது. கி.பி 6- ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தேரோட்டம் நடைபெற்று வருகிறது என்பதை திருநாவுக்கரச ரின் தேவாரப் பதிகம் மூலம் அறிய முடிகிறது. 1748 ஆம் ஆண்டு நடை பெற்ற ஆழித்தேரோட்டம் குறித்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணங்கள் தெரிவிக்கின் றன. அத்துடன், 1765 இல் தஞ்சையை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, ஆழித் தேரோட் டத்தில் பங்கேற்றது தொடர்பான குறிப்புகளும் உள்ளன. நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர் பாபு,  வனிக வரித்துறை மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் பி.முர்த்தி ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருட்டி ணன், சட்டமன்ற உறுப்பினர் புண்டி  கே.கலைவாணன், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுதுறை அமைச்சர் உ.மதிவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் கோ.பாலசுப்ரமணி யன் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, ஆரூரா, தியா கேசா என்ற  கோஷம் விண்ணைப் பிளக்க, பச்சைக் கொடி அசைய, கீழ வீதியிலிருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி புறப்பட் டது ஆழித்தேர். இரண்டு புல்டோ சர்கள் பின்னிருந்து தள்ள, முட்டுக் கட்டைகளுடன் தேர்ப் பணியாளர்கள், தேரின் அடியிலும், தேரைச் சுற்றிலும் இருந்து சமப்படுத்தியபடி செல்ல, நான்குகுதிரைகள் மற்றும் யாழம் இவை முன்னிருந்து இழுக்க, ரிஷபக் கொடி உச்சியில் பறந்தபடி சென்றது ஆழித்தேர். இதைத்தொடர்ந்து, தேரடி யிலிருந்து அம்பாள் தேர், சண்டிகேஷ் வரர் தேர் ஆகியவை வடம் பிடிக்கப் பட்டு, புறப்பட்டன.

;