districts

img

தினமும் உயர்த்தப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஒன்றிய அரசைக் கண்டித்து சிபிஎம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஏப்.4 - நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இந்திய நாட்டு மக்களை வஞ்சிக்கும் எண்ணத்தோடு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தி வரும் ஒன்றிய நரேந்திர மோடி அரசாங்கத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவாரூர் நகரத்தில் அண்ணாசிலை கூட்டுறவு பெட்ரோல் பங்க் முன்பாக நகர செயலாளர் எம்.தர்மலிங்கம் தலைமையில், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ், மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித், லிகாய் சங்க கோட்ட செயலாளர் ஆர்.கருணாநிதி, சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், நகரக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  திருவாரூர் ஒன்றியம் குன்னியூர் ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கதா.க.அரசுதாயுமானவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கோமதி, சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர் வசந்தா கணேசன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியக் குழு சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் கே.கோபு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சாமிநாதன் மற்றும் ஒன்றிய-நகர குழுவினர் கண்டன உரையாற்றினர். திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய குழுவின் சார்பில் ஆலத்தம்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டையில் ஒன்றிய-நகர குழுவின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் கே.பழனிச்சாமி, நகர செயலாளர் சி.செல்லதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் 
கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய குழு சார்பாக பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.ஜான்கென்னடி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ரெ.சுமதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர்.

கோட்டூர்  
கோட்டூர் ஒன்றிய குழு சார்பாக பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேலு தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம் கண்டன உரையாற்றினார். மூத்த தலைவர் எஸ்.தங்கராசு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி
திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் பேசினார். இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேராவூரணி பெரியார் சிலை அருகில் ஒன்றியச் செயலாளர் எம்.இந்துமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள், திராவிடர் விடுதலைக் கழகம் சித.திருவேங்கடம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், டெம்போ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். 

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தரங்கம்பாடி ஒன்றியம், திருக்கடையூரில் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் காபிரியேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உரையாற்றினர்.  முன்னதாக ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஏராளமானோர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகர செயலாளர் துரைக்கண்ணு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரியப்பன் உரையாற்றினார். குத்தாலத்தில் ஒன்றிய செயலாளர் சி.விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின் உரையாற்றினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகரத் தலைநகரங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் இரு சக்கர வாகனங்களை கயிறு கட்டி இழுத்து, வாகனங்களை ஓட்டாமல் தள்ளிக்கொண்டு, சமையல் எரிபொருள் சிலிண்டர்களுக்கு பாடைகட்டி, ராக்கெட் வேகத்தில் உயர்வதாகச் சித்தரித்தும் பல்வேறு நூதன வடிவங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஜி.நாகராஜன், சி.அன்புமணவாளன், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கறம்பக்குடியில் ஒன்றியச் செயலாளர்கள் பி.வீரமுத்து, எஸ்.காமராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் எம்.பாலசுந்தரமூர்த்தி, துரை.அரிபாஸ்கர், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். கீரமங்கலத்தில் ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுசீலா, பேரூராட்சி கவுன்சிலர் ஞா.பாலமுருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

கந்தர்வகோட்டையில் ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல், ஜி.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர். விராலிமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். கீரனூரில் எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல். ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பீமராஜ், பேரூராட்சி கவுன்சிலர் கே.மகாலெட்சுமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். அன்னவாசலில் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி, ஆர்.சி.ரெங்கசாமி, எம்.ஜோஷி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

அறந்தாங்கி
கட்சியின் அறந்தாங்கி தாலுகா குழு சார்பாக அறந்தாங்கி செக் போஸ்ட்டில் இருந்து இருசக்கர வாகனத்தை மாட்டுவண்டியில் ஏற்றியும், சமையல் எரிவாயு உருளைக்கு பாடைகட்டியும் சோக இசையுடன் நூதனப் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா தலைமையில், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா மற்றும் நகரச் செயலாளர் கணேசன். தாலுகா குழு உறுப்பினர்கள் பலர் மெளன ஊர்வலமாக வந்து, கட்டுமாவடி சாலை பெட்ரோல் பங்க் அருகில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து தலைமை வகித்தார். கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்அஜீஸ், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.சித்தார்த்தன், கே.டி.எம்.சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்வேளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் சட்டமன்ற குழு தலைவரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி தலைமை வகித்தார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.அபுபக்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை.சுப்பிரமணியன், வேதை வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வெற்றியழகன், வேதை தெற்கு ஒன்றிய செயலாளர் வி.அம்பிகாபதி, ஆர்.வெண்சங்கு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைஞாயிறு கடைத்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர் ஒன்றிய குழு, பெரம்பலூர் நகர குழு சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, பெரம்பலூர் நகர செயலாளர் சிவானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் டி.ரங்கராஜ் கண்டன உரையாற்றினர்.  ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.ரெங்கநாதன், கிளை செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை வகித்தனர். வேப்பந்தட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோகுலகிருஷ்ணன் மற்றும் சி.பாரதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலாளர் பரமசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;