districts

img

இந்தியைத் திணிக்கும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஏப்.19-  மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசின் இந்தியை திணிக்கும் நடவடிக்கைகளை உடனே கைவிடக் கோரியும் மத்திய பல்கலைக் கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். நீடாமங்கலம், குடவா சல், நன்னிலம், வலங்கைமான், கொரடாச் சேரி, எரவாஞ்சேரி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்துறைப் பூண்டியில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கரூர் 
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியக்குழு சார்பில் க.பரமத்தி கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.ஆர். ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு உரையாற்றினார்.  தோகைமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் ஏ.பெருமாள் தலைமை வகித்தார்.

கும்பகோணம்
கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர்
அரியலூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் துரை.அருணன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் எம்.இளங் கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமானூர், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.  

பெரம்பலூர் 
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் எம்.கருணாநிதி தலைமை வகித்தார். ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் வட்டச் செயலாளர் செல்லதுரை, வேப்பந்தட்டையில் ஒன்றியச் செயலாளர் கோகுலகிருஷ்ணன், குன்னம் தாலுகாவில் வட்டச் செயலாளர் செல்லமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், கரும்பு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் விளக்கி பேசினர்.

;