districts

img

இ-சேவை மையத்தில் இயங்கும் புலவர்நத்தம் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டிடம் எப்போது கட்டப்படும்?

குடவாசல், ஜூலை 14 - திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியம் புலவர்நத்தம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட நல  தொடக்கப் பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்திருந்தது. இதனால் மாண வர்கள் நலன் கருதி பள்ளிக் கட்டி டம் இடிக்கப்பட்டது. பொது மக்களின் கோரிக்கையை அடுத்து புதிய பள்ளி கட்டிடம் கட்டும்  வரை, அருகில் உள்ள நரிக்குடி  இ-சேவை மையத்தில் தற்காலிக மாக பள்ளி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாகியும் புலவர்நத்தம் பள்ளிக் கான புதிய கட்டிட பணிகள் இது வரை துவங்கப்படாமல் கிடப்பில் உள்ளன. தற்போது நரிக்குடி இ-சேவை மையத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட நல பள்ளியில் 40-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் படித்து வரு கின்றனர். நரிக்குடி இ-சேவை மைய கட்டிடம் தற்போது பல இடங்க ளில் விரிசல் விட்டும், தரைத்தளத் தில் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் பெயர்ந்து மாணவர்கள் நடந்து செல்லும் போது, தடுக்கி விழும் ஆபத்தும் அடிக்கடி ஏற்படுகிறது.  மேலும் மாணவர்கள் எண்ணிக்கை தகுந்தது போல் இ-சேவை மையத் தில் கழிவறைகள் இல்லை. அருகே  உள்ள குளத்தின் திறந்த வெளியில் தான் மாணவர்கள் கழிவறைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே  சம்பந்தப்பட்ட நிர்வாகம், இடிக்கப் பட்ட புலவர்நத்தம் ஆதிதிராவிட நலப் பள்ளிக்கு தேவையான புதிய  கட்டிடம் கட்டும் உடனே பணி யினை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

;