districts

அதிகரிக்கும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு: திருவாரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

திருவாரூர், ஜூலை 9 -  அண்டை மாநிலமான புதுச்சேரியில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. இதனை யடுத்து திருவாரூர் மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டு வருகின்றன. அதன்படி, நோய்த்தொற்றுடையோரை கண்காணிக்கும் பணியை இடைநிலை சுகாதார பணியாளர்கள், சுகாதார ஆய்வா ளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் களால் மேற்கொள்ளவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து  அனைத்து பகுதிகளிலும் குளோரினேஷன்  செய்யப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படு வதையும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு நோயாளிகளுக்கு ஓஆர்எஸ் குடிநீர்  வழங்கவும், நோயாளிகளின் முகவரியினை குறித்து வைத்து உடல்நிலையினை கண்கா ணித்து அதன் விபரங்களை பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நோயாளிகளின் உரிய மாதிரிகளை சேகரித்து பரிசோதித்தல், அனைத்து பள்ளி  ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களிடம் அவர வர் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு பாதித்தவர்கள் பற்றி சுகாதாரத் துறையினரிடம் தகவல் தெரிவிக்க  வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்தபின் பயன்படுத்துதல், உணவு உண்பதற்கு முன்னும், பின்னும் கை கழுவுதல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும் நடமாடும் மருத்துவக் குழு மூலம்  காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான மருந்துகளும், மருத்துவ உப கரணங்களும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;